Home கல்வி உலகம் ஏன் ஹாஸ்பிடாலிட்டி மேலாண்மை கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஏன் ஹாஸ்பிடாலிட்டி மேலாண்மை கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும்?

49
0

ஏன் ஹாஸ்பிடாலிட்டி மேலாண்மை கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும்? 

வேகமாக நகரும் வாழ்க்கை சூழலில் ஒவ்வொரு நாளும் நமக்கு புதியதொரு சவால் காத்திருக்கிறது. உங்கள் சொந்தக்காலில் சுற்றும் போது, சிந்திப்பது, செயல்படுவது, உணர்வதில் நீங்கள் சிறப்பாக செயல்பட முடியும். விருந்தோம்பல் எனப்படும் ஹாஸ்பிடாலிட்டி துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. ஹாஸ்பிடாலிட்டி என்றதுமே வெயிட்டர்கள், பாரிஸ்டா போன்றவை தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் இவை அல்லாது பல்வேறு பணிகளும் இத்துறையில் உள்ளன. ஹாஸ்பிடாலிட்டி என்பது சுற்றுலாத் துறையோடு தொடர்புடையது.

ஹாஸ்பிடாலிட்டி வேலைவாய்ப்புகள் சிறப்பானவை என்பதற்கான 10 காரணங்கள்

பிரிஷ்டீஷ் ஹாஸ்பிடாலிட்டி அசோசியேஷனின், 2016ம் ஆண்டு டிரெண்ட் மற்றும் புள்ளி விவரப்படி, 1.9 மில்லியன் பேர் இத்துறையில் பணியாற்றுகிறார்கள்.

1. இதில் பணி சோர்வு கிடையாது.

ஹாஸ்பிடாலிட்டி துறையில் வேலைவாய்ப்பு என்பது பலதரப்பான வாய்ப்புகளை கொண்டது. பல்வேறு வகையான டாஸ்க் இருக்கும் துறை என்பதால், நீங்கள் கற்றுக் கொண்டே இருக்க முடியும், வளர்ந்தபடியே இருக்க முடியும்.

2. இது கிரியேட்டிவானது

மக்களை சார்ந்த துறை என்பதால் இதில் கிரியேட்டிவிட்டி அதிகம். நீங்கள் உணவோ அல்லது ஒரு அனுபவத்தையோ உருவாக்கும் இடத்தில் இருப்பதால், உங்கள் வாடிக்கையாளரை மகிழ்ச்சிப்படுத்த புதிய வழிகளை பற்றி யோசித்துக்கொண்டே இருப்பீர்கள்.

3. உலகளவில் வெற்றி வாய்ப்புகளை உருவாக்குகிறது

ஒவ்வொரு நாட்டிலுமே, ஹாஸ்பிடாலிட்டி துறை உள்ளது. இங்கே நீங்கள் கற்கும் திறமையை எங்கே வேண்டுமானாலும் காண்பிக்கலாம். புதிய நாடுகள், புதிய கலாச்சாரம் மற்றும் புதிய மக்களை நோக்கி செல்ல உதவும் துறை இது.

4. பணி நிலை தேக்கம் கிடையாது

ஒரே பொஷிஷனில் சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை, ஹாஸ்பிடாலிட்டி துறையில் கிடையாது. இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதால், பல வேலைவாய்ப்புகளுக்கு மாறிக் கொள்ளலாம். ரிசப்ஷனிஸ்ட் வேலை முதல் ரிசர்வேஷன் மேனேஜர் வரை பல வாய்ப்புகள் இங்கே உள்ளன. வேறு எங்கே இது போன்ற பன்முகத்தன்மை கிடைக்கும்?

5. விரைவிலேயே உயர் பொறுப்பை எடுக்கலாம்

ஹாஸ்பிடாலிட்டி துறையில், விரைந்து தலைமை பொறுப்புக்கு வந்துவிட முடியும். உங்கள் திறமையை முழுமையாக பயன்படுத்தினாலும், கடின உழைப்பை கொடுத்தாலும், வாடிக்கையாளர்கள், உடன் பணியாற்றுவோருடன் இணக்கமாக பணியாற்றினாலும், நீங்கள் விரைவிலேயே சீனியர் பொறுப்பிற்கு வந்து ப்ராஜக்ட்டுகளையும், மக்களையும் மேலாண்மை செய்யும் இடத்திற்கு வர முடியும்.

6. எங்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம்

எஸ்.டி.ஆர் குளோபல் அறிக்கைப்படி, 2012 நிலவரப்படி, 187000 ஹோட்டல்கள் உலகமெங்கும் உள்ளன, 17.5 மில்லியன் அறைகள் அவற்றில் உள்ளன. நீங்கள் எந்த ஒரு நகரத்திற்கும், டவுனுக்கும், சிறு நகரங்களுக்கும் சென்று, உங்கள் அனுபவத்திற்கேற்ற பணியை பெற முடியும். வருங்காலத்தில், ஹாஸ்பிடாலிட்டி துறை சிறந்து விளங்கப் போகிறது. இன்னும் 20 வருடங்களில், 10 பேரில் ஒருவர் ஹாஸ்பிடாலிட்டி துறையில், பணியாற்றப்போகிறார்கள்.

7. உலகில் மிக வேகமாக வளரும் துறை

உலக சுற்றுலா மற்றும் டிராவல் கவுன்சிலின் பொருளாதார தாக்க அறிக்கையின்படி, டிராவல் மற்றும் டூரிசம் துறை 2015ல் உலகமெங்கும் 7.2 மில்லியன் வேலைவாய்ப்புகளை கொடுத்துள்ளது. உலக உள்நாட்டு உற்பத்தியில் 7.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பங்களிப்பை கொடுத்துள்ளது. லேபர் புள்ளி விவரத்துறை புள்ளி விவரப்படி, அமெரிக்காவில் 2016 அக்டோபருக்கு பிறகு 15.5 மில்லியன் பணியாளர்கள் இத்துறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்

8. குறைந்த சம்பளத்தில் செட்டில் ஆக வேண்டியதில்லை

ஆரம்பத்தில், ஹாஸ்பிடாலிட்டி வேலைவாய்ப்பு குறைவான ஊதியத்தை கொடுக்க கூடும். ஆனால், மிக விரைவிலேயே அடுத்த கட்டத்திற்கு நகரும் வாய்ப்பு இதில் உள்ளதால் அதிக சம்பளம் பெற முடியும். அந்த அளவுக்கு விதவிதமான வேலைவாய்ப்புகள், ஹாஸ்பிடாலிட்டி துறையில் கொட்டிக்கிடக்கின்றன. உங்கள் கேரியரில் திருப்தியில்லை என சொல்லும் அவகாசம் வராது.

9. விரும்பப்படுதலும், பாராட்டுதலும் அதிகளவில் கிடைக்கும்.

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் உங்களின் சிறந்த பணிக்காக உங்களை வாழ்த்தினால் கிடைக்கும் உணர்வை நினைத்து பாருங்கள். ஹாஸ்பிடாலிட்டி துறை இது போன்ற வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கும். விருந்தினரை சிரித்த முகத்தோடு வரவேற்பதன் மூலம், நீங்கள் அவரின் அன்றைய நாளை சிறப்பானதாக அமைத்து கொடுக்கிறீர்கள்.

10. பணியின் போது உங்களின் தனித்துவ படைப்பாற்றலை காண்பிக்க முடியும்.

கலைஞர்களும், இசை வல்லுநர்களும் மட்டுமே தங்கள் பணிகளில் கிரியேட்டிவை காண்பிக்க முடியும் என்று இல்லை. கார்பொரேட் செட்டிங்கை போல ஹாஸ்பிடாலிட்டி துறையில், கடினமான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் கிடையாது. உங்கள் தனித்துவத்தை, தனி ஸ்டைலை வெளிக்காட்ட முடியும். உணவு தயாரிப்பு முதல் விருந்தினர்களை உபசரிப்பது வரை உங்களுக்கென்ற தனி பாணியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை 9.6 சதவீதம் பங்கை பிடித்துள்ளது. அன்னிய செலவாணியை ஈட்டுவதில் ஹாஸ்பிடாலிட்டி துறைக்கு 3வது இடமாகும்.
  • 2016ல் சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறைகள் ஜிடிபிக்கு அளித்த பங்களிப்பு 71.53 அமெரிக்க பில்லியன் டாலர்களாகும்.
  • 2006-17 காலகட்டத்தில், சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறை ஜிடிபி 14.05 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சுற்றுலா மற்றும் டிராவல் துறையின் ஜிடிபி பங்களிப்பு 2017ம் ஆண்டுக்குள் 147.96 அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here