Home நாட்டு நடப்பு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்காக தமிழகத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல்

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்காக தமிழகத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல்

43
0

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்காக தமிழகத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல்

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக தமிழகத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்று வந்தன.

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறையே பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதி இருக்கும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வந்து சரிபார்ப்பு பணியை மேற்கொள்வார்கள்.

பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு இனிமேலும் விண்ணப்பங்களை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த விண்ணப்பங்கள் வருகிற ஜனவரி 4-ந் தேதி வெளியிடப்படவுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கு பரிசீலிக்கப்படாது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here