Home நாட்டு நடப்பு ரெயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவழித்துவிட்டோம் – கொள்ளையர்கள் வாக்குமூலம்

ரெயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவழித்துவிட்டோம் – கொள்ளையர்கள் வாக்குமூலம்

43
0

ரெயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவழித்துவிட்டோம் – கொள்ளையர்கள் வாக்குமூலம்

சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி இரவு புறப்பட்ட ரெயிலில் இருந்த சரக்கு பெட்டியில் ரூ.342 கோடி கிழிந்த ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டது.

இந்த ரெயிலின் மேற்கூரையில் கொள்ளையர்கள் துளையிட்டு மரப்பெட்டியில் இருந்த ரூ.5.78 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சேலம்-விருத்தாச்சலம் இடையே இந்த கொள்ளை நடந்தது தெரிய வந்தது.

இஸ்ரோ உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. விசாரணையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மோஹர்சிங் தலைமையிலான கும்பல் பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

கொள்ளையர்களிடம் போலீசார் நேற்று நடத்திய விசாரணையின் போது கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரே பங்கு பிரித்து செலவு செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here