Home நாட்டு நடப்பு ராஜஸ்தான் அரண்மனை ஓட்டலில் ஒருநாள் வாடகை ரூ.11 லட்சம்

ராஜஸ்தான் அரண்மனை ஓட்டலில் ஒருநாள் வாடகை ரூ.11 லட்சம்

23
0

ராஜஸ்தான் அரண்மனை ஓட்டலில் ஒருநாள் வாடகை ரூ.11 லட்சம்

ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக ஏராளமான ஆடம்பர ஓட்டல்கள் உள்ளன.

இதுதவிர புகழ்பெற்ற அரண்மனைகள் நட்சத்திர ஓட்டல்களாக மாற்றப்பட்டு உள்ளன. அரண்மனை ஓட்டல்களில் தங்குவதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் ராஜஸ்தான் வந்து குவிந்துள்ளனர். வருகிற 31-ந்தேதி நள்ளிரவில் ஓட்டல்களில் கொண்டாட்டம் களைகட்ட உள்ளது. இதையடுத்து அரண்மனை ஓட்டல்களில் புத்தாண்டு அன்று ஒரு நாள் தங்குவதற்கு ரூ.11 லட்சம் வாடகை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் பேலஸ் மற்றும் உதய்ப்பூரில் உள்ள தாஜ்லேக் பேலஸ் ஓட்டல் ஆகிய இரு ஓட்டல்களும் இந்த அளவுக்கு வாடகையை உயர்த்தி நிர்ணயம் செய்துள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதத்தில் ராஜஸ்தான் நட்சத்திர ஓட்டல்களில் 40 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இதற்கு அடுத்தபடியாக ஜெய்ப்பூர் ராம்பாக் பேலஸ் ஓட்டலில் அறை வாடகை ரூ.8.52 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புத்தாண்டையொட்டி 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here