Home நாட்டு நடப்பு முதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை

முதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை

48
0

முதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை

இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒடிசா மாநிலத்தில்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் ஒரு லிட்டர் அதைவிட 13 காசுகள் அதிகமாக, அதாவது ரூ.80.78க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐந்தாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் குறைந்துள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் குறைந்து ரூ.74.92க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் ரூ.86.91க்கும், டீசல் ரூ.78.54க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தா மற்றும் சென்னையில் பெட்ரோல் ரூ.83.29-க்கும்,டீசல் ரூ.84.64-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here