Home நாட்டு நடப்பு பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல்

பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல்

29
0

பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல்

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை நாளை (ஜன-1) முதல் அமலுக்கு வருகிறது. புத்தாண்டின் தொடக்கமே ஒரு புது முயற்சியின் தொடக்கமாக மலர போகிறது.

பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் தாள், தட்டு, தேனீர் கப், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் கொடிகள், உறிஞ்சி குழல், உள்பட 14 விதமான பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. நாளை முதல் இவை அமலுக்கு வருகிறது.

அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மண் கெடுகிறது, தண்ணீர் கெடுகிறது என்பதற்காகத் தான் இந்த முடிவு.

இதற்காக 12 வகை மாற்றுப் பொருட்களை அரசு அறிவித்துள்ளது. வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டை, பேப்பர் கப், கண்ணாடி குவளை, மண்பாண்ட பொருட்கள் ஆகியவற்றை அறிவித்துள்ளது. இதன்மூலம் நல்ல சுற்றுச்சூழல், தூய்மையான காற்று கிடைக்கும். விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையை அரசு ஏற்படுத்தி வருகிறது.

அரசின் இந்த அறிவிப்பின் மூலம் 5 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அவர்களையாவது மாற்று தொழிலுக்கு ஊக்குவித்து விடலாம். ஆனால் இந்த திட்டத்தின் மிகப்பெரிய ஓட்டையாக கருதப்படுவது பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு வரும் பொருட்கள்.

இந்த பொருட்களுக்கு தடை இல்லை. பால், தயிர், மருந்துகள் அடைத்து வரும் பாக்கெட்டுகளுக்கு தடை இல்லை. தற்போது தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை விட அதிகமாக இந்த பொருட்கள் புழக்கத்துக்கு வருகின்றன.

இவற்றையும் தடை செய்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக இவற்றையும் தடை செய்வதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். நாளை முதல் தடை அமலுக்கு வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here