Home நாட்டு நடப்பு பிளாஸ்டிக் தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு முத்தரசன் வேண்டுகோள்

பிளாஸ்டிக் தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு முத்தரசன் வேண்டுகோள்

36
0

பிளாஸ்டிக் தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு முத்தரசன் வேண்டுகோள்

பிளாஸ்டிக் தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக்குக்கு தடை விதித்துள்ளது. அரசின் தடை என்பது ஒட்டுமொத்த பிளாஸ்டிக்குக்கும் அல்ல. தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு பிளாஸ்டிக் தொழில் முனைவோர்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குக்கு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.

சிறு, குறு தொழில் முனைவோர், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே தயாரிக்கின்றனர். இத்தகைய பிளாஸ்டிக்குக்குத் தான் தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சி செய்ய முடியாதவை ஆகும். அதனை தமிழக அரசு தடை செய்யவில்லை என்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

சிறு, குறு தொழில் முனைவோர், வங்கி மற்றும் தனியாரிடம் கடன் பெற்றும், தங்களின் நகை மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்தும், அதனை விற்பனை செய்தும், இத்தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.

திடீர் தடை காரணமாக அவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகிறது. முதலீடு செய்தவர்கள் மட்டுமின்றி 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் சங்கம் சார்பில் தங்களது கோரிக்கைகள் குறித்து அரசிடம் தொடர்ந்து எடுத்துக்கூறியும் பயனளிக்காத நிலையில் நாளை (18-ந்தேதி) மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர்.

தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாது, பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் அதனை நம்பியுள்ள 5 லட்சம் தொழிலாளர்கள் நலன்களை கவனத்தில் கொண்டு, பிளாஸ்டிக் தடை குறித்து மறுபரிசீலனை செய்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here