Home நாட்டு நடப்பு நெல் ஜெயராமன் மறைவு தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பு- ஸ்டாலின் இரங்கல்

நெல் ஜெயராமன் மறைவு தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பு- ஸ்டாலின் இரங்கல்

40
0

நெல் ஜெயராமன் மறைவு தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பு- ஸ்டாலின் இரங்கல்

நெல் ஜெயராமன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நெல் ஜெயரமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பு என திமுக தலைவர்கள் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து, அதுகுறித்த விழிப்புணர்வை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் எடுத்துச் சென்றவர்களில் மிக மிக முக்கியமானவர் நெல் ஜெயராமன்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், இயற்கை ஆர்வலர்கள், விவசாய பெருமக்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here