Home நாட்டு நடப்பு ஆபாச வலைத்தளங்களை அதிரடியாக முடக்கிய ஜியோ.!

ஆபாச வலைத்தளங்களை அதிரடியாக முடக்கிய ஜியோ.!

51
0

ஆபாச வலைத்தளங்களை அதிரடியாக முடக்கிய ஜியோ.!

மலிவான விலையில் அதிக டேட்டா சேவைக் கிடைப்பதனால், மக்கள் அதிகளவில் ஆபாசப்படங்களைப் பார்ப்பதாக, அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதற்கு உத்தரகண்ட் உயர் நீதி மன்றம் அதிரடி தீர்ப்பை அறிவித்திருந்தது.

உத்தரகண்ட் உயர் நீதி மன்றம், 857 ஆபாச வலைத்தளங்களை உடனே முடக்கும்படி இணையச் சேவை வழங்குநர் நிர்வாகத்திற்கு ஆணையிட்டிருந்தது.

ஜியோ

ஆபாசப் படங்கள் மற்றும் ஆபாச இணையதளங்களை அதிகம் பயன்படுத்தும் உலகநாடு பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மலிவான விலையில் அதிக டேட்டா சேவை வழங்கப்படுவதே என்பதும் தெரியவந்துள்ளது. இந்திய டெலிகாம் சந்தையில் பயனர்களுக்கு அதிக டேட்டா சேவை வழங்கும் ஜியோ நிறுவனத்திற்கே, இந்தப் பெருமை சென்றடைந்துள்ளது.

75% அதிகரித்துள்ளது

ஜூன் 2017 இல், நொய்டா சார்ந்த வீடியோ உளவுத்துறை நடத்திய ஆய்வில், இந்தியாவில் மட்டும் ஆபாச வலைத்தளங்கள் பயன்படுத்தும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்பது மாதங்களில் 75% அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் டேட்டா திட்டத்தின் விலைகள் வீழ்ச்சியடைந்த பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

வலைத்தளங்கள் முடக்கம்

உத்தரகாண்ட உயர் நீதிமன்றம் 857 ஆபாச வலைத்தளங்களைத் உடனே முடக்கச் சொல்லி ஆணையை பிறப்பித்தது. ஆனால் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி (எம்.இ.ஐ.டி.) செய்த ஆய்வில், கொடுக்கப்பட்ட 857 ஆசாபாச வலைத்தளங்களில் 30 வலைத்தளங்கள் எந்த ஆபாச உள்ளடக்கம் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜியோ பயனர்களுக்கு ஆபாச வலைத்தளங்கள் முடக்கம்

தற்பொழுது இந்தியாவில் 827 ஆபாச வலைத்தளங்கள், அரசு உத்தரவின்படி முடக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறைந்த விலையில் அதிக டேட்டா சேவை வழங்கிய ஜியோ நிறுவனமும் தானாக முன்வந்து ஆபாச வலைத்தளங்களை முடங்கியுள்ளது. நேற்று மாலை முதல் ஜியோ பயனர்ளுக்கு ஆபாச வலைத்தளங்கள் அனைத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here