Home அழகப்பா பல்கலைக்கழகம் NET 2018 இலவச பயிற்சி வகுப்புகள்

NET 2018 இலவச பயிற்சி வகுப்புகள்

55
0

NET 2018 இலவச பயிற்சி வகுப்புகள்

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் & JRF பணி இடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியக்குழு மூலம் தேசிய தகுதித் தேர்வு (NET 2018)  டிசம்பர்  09, 2018 முதல்  டிசம்பர் 23, 2018 வரை நடத்தப்பட உள்ளது.  இத்தேர்வை நேஷனல் டெஸ்டிங்க் ஏஜென்சி(National Testing Agency) நடத்துகிறது. இந்த தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் தாள் -1 க்கு இலவச பயிற்சி வகுப்புகள் அழகப்பா பல்கலைக்கழகத் தன்னார்வ பயிலும் வட்டத்தின்  மூலம் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் இத்தேர்வை சிறப்புடன் எதிர்கொள்ள மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். இதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பர்  01, 2018 முதல் டிசம்பர் 08, 2018 வரை நடத்தப்பட உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் இப்பயிற்சியில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் பழனியப்ப செட்டியார் நினைவரங்கத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்திற்கு நேரில் சென்று பெயரை பதிவு செய்து கொள்ளலாம். 04565- 223266 என்ற தொலைபேசியிலோ அல்லது 8870781897 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். அல்லது alagappauniversitystudycircle@gmail.com என்ற மின்அஞ்சல் மூலமாகவும் பதிவு செய்யலாம்.

வகுப்புகள் நடைபெறும்இடம்: அழகப்பா பல்கலைக்கழகத் தன்னார்வ பயிலும் வட்டம், காரைக்குடி.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here