Home அழகப்பா பல்கலைக்கழகம் தேசிய ஆற்றல் சேமிப்பு தின கருத்தரங்கம்

தேசிய ஆற்றல் சேமிப்பு தின கருத்தரங்கம்

21
0

தேசிய ஆற்றல் சேமிப்பு தின கருத்தரங்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆற்றல் அறிவியல் துறை மற்றும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த “தேசிய ஆற்றல் சேமிப்பு தின கருத்தரங்கம்” பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் 13.12.2018-அன்று நடைபெற்றது. கருத்தரங்கில் ஆற்றல் அறிவியல் துறைத்தலைவர் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.கருப்புசாமி வரவேற்புரையாற்றினார்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையேற்று உரைநிகழ்த்துகையில், உலக வெப்பமயமாதலை தடுப்பது இன்றைய ஆராய்ச்சி மாணவர்கள் கையில் தான் உள்ளது. இன்றைய ஆராய்ச்சி மாணவர்கள் புதுப்பிக்க முடியாத ஆற்றல் மூலத்தை பயன்படுத்துவதை கைவிட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலத்தை பயன்படுத்த வேண்டும் என்றார். மேலும் அவர் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை சமூக அக்கறையுடன் செய்து, தனது ஆராய்ச்சியானது சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டுமெனக் கூறினார். மேலும், அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் சூரிய பூங்கா ஒன்றை விரைவில் துவங்க இருப்பதாகவும், அதன் மூலம் பல்கலைக்கழக மின் பயன்பாட்டுச் செலவானது 50 சதவிகிதத்திற்கும் மேல் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் கே.குருநாதன், தன் தொடக்க உரையில், ஆற்றல் சேமிப்பின் முக்கியத்துவத்தையும், ஓசோன் படலப் பாதுகாப்பைப் பற்றியும், உலக வெப்பமயமாதலின் விளைவுகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

திண்டுக்கல், காந்திகிராமப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.விக்ரமன் தனது சிறப்புரையில், ஆற்றல் சேமிப்பைப் பற்றியும், அதை மேற்கொள்ளும் வழிமுறைகளைப் பற்றியும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். பலவகையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பற்றியும் அவைகளில் சூரிய ஆற்றல் மூலத்தின் தனித்துவத்தைப் பற்றியும் விளக்கிக் கூறினார்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மைய துணை ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் வி.தருமன் நன்றியுரை ஆற்றினார். இக்கருத்தரங்கில் அறிவியல் துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை அறிவியல் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here