Home அழகப்பா பல்கலைக்கழகம் மாளவியா நினைவு விருது

மாளவியா நினைவு விருது

43
0

மாளவியா நினைவு விருது

அண்மையில் (22.11.2018) ஹைதராபாத்தில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் (BioSD – 2018), இந்திய உயிரித்தொழில்நுட்பவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (BRSI) சார்பாக, CSIR பொது இயக்குனர் மற்றும் DSIR செயலாளர் Dr. சேகர் மாண்டே அவர்கள், அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ச. கருத்தபாண்டியன் மற்றும் சஞ்சீவ் குமார் சிங் ஆகியோருக்கு முறையே மாளவியா நினைவு விருது (Malaviya memorial award) மற்றும் சஞ்சீவ் விருதை (Fellow award) வழங்கி கௌரவித்தார். BRSI கழகமானது 2003-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, இன்று 3700 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விஞ்ஞானிகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.. இக்கழகமானது மனித சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் உயிரித்தொழில்நுட்பவியல் துறையின் தகுதியையும் திறனையும் மேம்படுத்தும் வண்ணம் செயல்பட்டு வருகிறது.

பேராசிரியர் பாண்டியன் அவர்கள் முதன் முறையாக, நவீன தொழில்நுட்ப முறையைப் (Next Generation Sequencing Technology) பயன்படுத்தி ஆராய்ந்து, பால்க் ஜலசந்தி (Palk Bay) பகுதிகளிலுள்ள பாக்டீரியங்களின் பன்முகத்தன்மையை (Bacterial diversity) கண்டறிந்துள்ளார். மேலும், கீல்வாத இதயநோயை (Rheumatic heart disease) ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரி Group A Streptococcus-ஐ நோயாளியின் மாதிரியிலிருந்து வேகமாகக் கண்டறியக்கூடிய அதிநவீன தொழில்நுட்பமுறையைக் (Highly sensitive PCR-SCAR based marker kit) கண்டறிந்துள்ளார். இவர், மனிதர்களையும் மற்றும் நீர்நிலைவாழ் உயிரிகளையும் தாக்கக்கூடிய நுண்ணுயிர்களுக்கு (Human and Aquaculture microbial pathogens) எதிராக செயல்படக்கூடிய மற்றும் நுண்ணுயிர்கொல்லி மருந்துகளுக்கு (Antibiotics) பதிலாக பயன்படுத்தப்படக்கூடிய பல்வேறு புதுவகையான நோய்க்கொல்லி மருந்துகளையும் (Anti-Quorum sensing and anti-biofilm agents) மேலும் அவை செயல்படும் விதத்தையும் கண்டறிந்துள்ளார். இதுவரை 20 மாணவர்களை முனைவர் பட்டத்திற்காக வழிநடத்தியுள்ளார். குறிப்பாக பேராசிரியர் பாண்டியன் அவர்கள், 17 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெற்றுள்ளதுடன், சர்வதேச அறிவியல் இதழ்களில் (International SCI Journals) 180 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் (Research Articles), 2 புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் இவர் பல்வேறு சர்வதேச அறிவியல் இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து முதன் முறையாக அறிவியல் அறிஞர் (D.Sc.) பட்டம் பெற்ற பெருமை இவரையே சாரும். மேலும் இவர், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித்துறைக்கு அளித்த சிறந்த பங்களிப்பிற்காக, தமிழ்நாடு விஞ்ஞானி விருதையும் (Tamil Nadu Scientist Award – 2012), ஸ்ரீ. பி. கே. தாஸ் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் (Shri. P. K. Das Memorial Life Time Achievement Award), அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருதையும் (Alagappa Excellence Award for Research), மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பணி இடைநிலை விருதையும் (UGC Mid-Career Award-2018) பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் சிங் அவர்கள் சர்வதேச அறிவியல் இதழ்களில் (International SCI Journals) 120 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் மற்றும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். இவர், ICMR – லாலா ராம் சந்த் காந்தாரி விருதையும் (ICMR Lala Ram Chand Kandhari Award -2014), ABAP – முதுநிலை விஞ்ஞானி விருதையும் (“Senior Scientist Award” from the Association of Biotechnology and Pharmacy), Dr. P. டெய்சி பிரசங்க விருதையும் (Dr. P. Daisy Oration Award – 2017 from Holy Cross College, Tiruchirapalli), பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் NASI– ன் உறுப்பினராகவும் (Member of the National Academy of Sciences), BIDDS-ன் பொது செயலாளராகவும் (Secretary General of Bioinformatics and Drug Discovery Society) பணியாற்றி வருகிறார்.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பேராசிரியர் நா. ராஜேந்திரன் அவர்கள், விருது பெற்ற பேராசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here