Home அழகப்பா பல்கலைக்கழகம் குரூப் – II இலவச பயிற்சி

குரூப் – II இலவச பயிற்சி

31
0

குரூப் – II இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாக குரூப் – II (நேர்முகத்தேர்வுடைய பதவிகள்) தேர்வு கடந்த 11.11.2018 நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் 17.12.2018-அன்று தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டது. தேர்வு முடிவுகளை தொடர்ந்து குரூப் II முதன்மை தேர்வின் தேதி பிப்ரவரி 23,2019 என்று அறிவிக்கப்பட்டது.

தேர்வாணையத்தின் அறிவிப்பின் படி இந்த தேர்வினை சிறப்பாக எதிர்கொள்ள அழகப்பா பல்கலைக்கழகத் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (23.12.2018) முதல் தொடர்ந்து வாரந்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் பழனியப்ப செட்டியார் நினைவரங்கத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்திற்கு நேரில் சென்று பெயரை பதிவு செய்து கொள்ளலாம். 04565- 223266 என்ற தொலைபேசியிலோ அல்லது 88707 – 81897 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். அல்லது alagappauniversitystudycircle@gmail.com என்ற மின்அஞ்சல் மூலமாகவும் பதிவு செய்யலாம். இத்தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இலவச பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here