Home அழகப்பா பல்கலைக்கழகம் எதிர்காலத்திற்கான தொழிட்நுட்பங்கள்

எதிர்காலத்திற்கான தொழிட்நுட்பங்கள்

59
0

எதிர்காலத்திற்கான தொழிட்நுட்பங்கள்

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேற்று (02.11.2018) “எதிர்காலத்திற்கான தொழிட்நுட்பங்கள்” என்ற தலைப்பில் இந்திய அரசின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பத்ம விபூன் முனைவர்.இரா.சிதம்பரம் அவர்கள் விரிவுரையாற்றினார்.  அவர் தமது உரையில் ஆல்வின் டாப்லர் என்ற அறிஞரின் கூற்றான “நேற்று வன்முறையே சக்தி எனக் கருதப்பட்டது, இன்று செல்வமே சக்தியாக கருதப்படுகிறது, நாளை அறிவே சக்தியாக இருக்கும்” என்பதை குறிப்பிட்டு அறிவுசார் தொழில்நுட்பத்தை மாற்றும் திறன் படைத்தவர்கள் நாளைய உலகில் வலிமைவாய்ந்தவர்களாக இருப்பார்கள் எனத் தெரிவித்தார்.  இன்றைய உலகில் அறிவுசார் பொருளாதாரம் மிக முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது.

அணு ஆற்றலின் முக்கியத்துவத்தையும் அதனுடன் சார்ந்த பொருளாதார முன்னேற்றத்தையும் குறிப்பிட்டு பேசும்பொழுது இந்தியாவில் அணுசக்தியின் பயன்பாடு எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துரைத்தார்.  மனித வள மேம்பாட்டு குறியீட்டின் அளவுகோல்களை குறிப்பிடும்பொழுது இந்தியாவைப் பொறுத்தமட்டில் பெண்களின் கல்வியறிவு மற்றும் தனி நபர் மின் நுகர்வு இவை இரண்டையும் கருத்தில் கொண்டு ஆற்றல் சக்தியை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றிய அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் இந்த நாள் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு முக்கிய நாள் என்றும், ஏனென்றால் ஆசிரியர்களும், மாணவர்களும் தலைசிறந்த ஒரு விஞ்ஞானியின் உரையை கேட்பதற்கு கொடுத்து வைத்தவர்கள் என்றார்.  தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தோடும், பாதுகாப்போடும் தொடர்புடையது என்றார்.  தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நம்முடைய சமுதாய முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவதாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

பேரா.ஹா.குருமல்லேஷ் பிரபு, பதிவாளர் அனைவரையும் வரவேற்றார்.  அறிவியல் புல முதன்மையர் பேரா.கு.பரிதிமாற்கலைஞன் அவர்கள் நன்றி கூறினார்.  பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here