Home இது எங்க ஏரியா Tata Nano Car-க்கு பின் உள்ள சுவாரஸ்ய கதை..

Tata Nano Car-க்கு பின் உள்ள சுவாரஸ்ய கதை..

46
0

டாடா நானோ உருவான கதை :

  • ஒருநாள் ரத்தன் டாடா சாலையில் சென்று கொண்டிருந்தபோது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் நனைந்தபடி ஒரு குடும்பம் சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த ரத்தன் டாடா மிகவும் வருந்தினார். அப்போது ஏழைகளும் பயன்படுத்தக்கூடிய ஒரு காரை உருவாக்க வேண்டும் என முடிவு செய்தார். அப்போது உதயமானதுதான் டாடா நானோ கார்.
  •  

  • வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார்கள் வெளிவரும் என்று டாடா நிறுவனம் அறிவித்தப்போது உலகமே கேலி செய்தது. தரம் குறைவாயிருக்கும், சிறு அடிபட்டாலும் கார் நொறுங்கிவிடும் என பழித்தனர். இது நிச்சயம் சாத்தியமில்லை என்று அனைவரும் கூறினார்கள்.
  •  

  • அதன்பின் 2003ஆம் ஆண்டு முதல் ரத்தன் டாடாவின் (நானோ கார்) கனவுக்கு செயல் வடிவம் கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 2005ல் இந்திய சாலைகளில் ஆட்டோக்களை ஓரம்கட்டி ‘டாடா ஏஸ்” வாகனம், வணிக ரீதியிலான வெற்றி பெற்றதே இதற்கு ஊக்கம் கொடுத்தது. 2006ல் டாடா நானோ உற்பத்தி திட்டமிடப்பட்டது.
  •  

  • 2008ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற மோட்டார் வாகனப் பொருட்காட்சியில் நானோ காரை அறிமுகப்படுத்தியதன் மூலம் இவரது கனவு நனவானது. டாடா நானோ-வின் மூன்று மாதிரிகளை காட்சிக்கு வைத்தார்கள். ஒரு லட்சம் ரூபாய் விலையில் ஒரு காரை தயாரித்து தனது வாக்குறுதியை ரத்தன் டாடா நிறைவேற்றினார்.
  •  

  • இந்திய சாலைகளில் நானோவை கம்பீரமாய் வலம்வர வைத்தது டாடா நிறுவனம். உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையை தனதாக்கியது நானோ. விலை குறைவு என்றாலும் தரத்தில் எந்தக் குறையும் இல்லாமல் வெற்றிகரமான மாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது நானோ. உலகின் அனைத்து கார் கம்பெனிகளும் டாடாவிற்கு தலை வணங்கின.
  •  

  • ‘நானோ” என்பதன் பொருள் குஜராத்தி மொழியில் ‘சிறிய” என்பதாகும். குஜராத்தி டாடா குழும நிறுவனர்களின் மொழியாகும்.

ரத்தன் டாடாவின் சொந்த வாழ்க்கை :

  • ரத்தன் டாடா மிகவும் வெளிப்படையான மனிதர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ‘நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?” எனக்கேட்டதற்கு ‘4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேறாமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளது” என்று சிரித்துக்கொண்டே வெளிப்படையாகச் சொன்னார் ரத்தன் டாடா.
  •  

  • ஆனால், அவையெல்லாம் ரத்தன் டாடாவின் சிந்தனையை சிதறடிக்கவில்லை. அவரது தொலைநோக்குப் பார்வைகளை சிதைக்கவில்லை. முன்னேற்றம் என்பதை மட்டும் முழு மூச்சாய்க் கொண்டு, இன்றுவரை செயலாற்றிக் கொண்டிருக்கிறார் ரத்தன் டாடா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here